Home செய்திகள் சிஐடியு பீடி தொழிலாளர் சங்க கூட்டம்;முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்..

சிஐடியு பீடி தொழிலாளர் சங்க கூட்டம்;முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்..

by mohan

தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் அரசன் பீடி தொழிலாளர்கள் சங்க கிளை அமைப்பு கூட்டம் சித்திபுத்தி சித்ரா செல்வி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சிஐடியு பீடி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் எம் வேல்முருகன், பீடி தொழிலாளர்களின் உரிமைகள்,சலுகைகள், இன்றைய காலத்தில் பீடி தொழிலாளர்களின் பாதிப்புகள், அதற்கான எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். இதில் பீடி தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் A.மகாவிஷ்ணு,P.கலா, S.அய்யாதுரை,பீடி சங்க கீழப்பாவூர் ஒன்றிய பொருளாளரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான A.கருப்பசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழப்பாவூர் நகர செயலாளர் முருகேசன், திமுகவின் நிர்வாகிகள் கீழப்பாவூர் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பொன் அறிவழகன் மற்றும் ராஜன் பிரஸ் உரிமையாளர் உட்பட 40 பீடி தொழிலாளர்கள் பங்கேற்றனர். புதிய நிர்வாகிகளாக தலைவர் வி ஜெயசீலா, துணைத் தலைவர் எஸ் மகேஸ்வரி, செயலாளர் S .சித்தி புத்தி சித்ரா செல்வி, துணைச் செயலாளர் M.தெய்வ பார்வதி, பொருளாளர் எஸ்.மாலதி ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மேலும், ஆலங்குளம் அருகே கடங்கநேரி கிராமத்தில் சிஐடியு மாவட்ட பீடி தொழிலாளர் சங்கத்தில் இணைந்து புதிய பீடி சங்க கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பீடி தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி தோழர் A.மகாவிஷ்ணு,பீடி சங்க ஆலங்குளம் தாலுகா செயலாளர் பரமசிவன், விவசாய தொழிலாளர் சங்க ஆலங்குளம் தாலுகா செயலாளர் ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுப்பட்டி கிளை செயலாளர் ஆறுமுகராஜ், கட்டுமான தொழிலாளர் சங்க சிஐடியு மாவட்ட பொருளாளர் சந்திரசேகர ஆசாத் உட்பட 40க்கும் மேற்பட்ட பீடி தொழிலாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்: “அரசன் பீடி கம்பெனி கீழப்பாவூர் கிளை 22 வருடமாக செயல்பட்டு வந்த கடையை 7-1-2022 முதல் கடையை அடைத்து வேலை வழங்க மறுத்து வருகிறார்கள்.பலமுறை பேசியும் இதுவரை அரசன் பீடி கம்பெனி நிர்வாகம் கடையை கீழப்பாவூரில் திறக்கவில்லை. தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகமும், தொழிலாளர் நலத் துறையும் உடனடியாக தலையிட்டு அரசன் பீடி கடையை திறந்து வேலை வழங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும். கடந்த ஓராண்டாக தொழிலாளர்களின் பிஎப் பணத்தை கட்டாமல் மோசடி செய்த அரசன் பீடி நிர்வாகத்தை நடவடிக்கை எடுத்து உடனடியாக வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் செலுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஓராண்டுக்கு மேலாக 2020-2021 ஆண்டு தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய போனஸ், லீவு சம்பளத்தை உடனடியாக அரசன் பீடி கம்பெனி நிர்வாகம் வழங்கிட தமிழக அரசும், தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்திட வேண்டும் போன்ற முக்கிய தீர்மானங்கள் முன் மொழியப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com