Home செய்திகள் தமிழக கேரள எல்லைப்பகுதியில் தென்காசி எஸ்.பி நேரில் ஆய்வு..

தமிழக கேரள எல்லைப்பகுதியில் தென்காசி எஸ்.பி நேரில் ஆய்வு..

by mohan

தமிழக கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடியில் தென்காசி மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவலர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பணி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS (16.01.2022) ஞாயிற்றுக் கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் நம் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கோ அல்லது கேரள மாநிலத்திலிருந்து நம் மாநிலத்திற்கோ தேவையற்ற பொருட்களை கொண்டு வருதல் தடுக்கப்படுகின்றதா எனவும், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நம் மாநிலத்திற்குள் வராமல் தடுக்க பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கொரோனா சோதனை சாவடி பாதுகாப்பான முறையில் அனைவரையும் சோதனை செய்த பின்னே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறதா என்பதையும் அவர் ஆய்வு செய்தார். மேலும் சோதனை சாவடியில் பணிபுரியும் காவலர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பணி மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com