Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..

தென்காசி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..

by mohan

தென்காசி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தர ராஜ் 05.01.22 புதன் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து வெளியிட்டார். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 01.01.2022 ஆம் நாளினைத் தகுதியேற்படுத்தும் நாளாகக்கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம், 2022-க்கான பணிகள் நிறைவு பெற்றுள்ளதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். சிறப்பு சுருக்க திருத்தம் மூலம் 28916 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்கள். தென்காசி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 13,55,724 ஆகும். இதில் ஆண்வாக்காளர்கள் எண்ணிக்கை: 661545, பெண் வாக்காளர்கள் 694113, மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 66 ஆக உள்ளது. சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்காளர்கள் 219. சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 123530, பெண் வாக்காளர்கள்:132233,மூன்றாம் பாலினத்தவர்கள்: 7, மொத்த வாக்காளர்கள் 255770 பேர்கள் உள்ளனர். 220. வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை: 119120,பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை: 124393, மூன்றாம் பாலினத்தவர் 2 பேர், மொத்த வாக்காளர்கள் 243515 பேர்கள் உள்ளனர். 221. கடையநல்லூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள்:145896, பெண் வாக்காளர்கள்: 148732, மூன்றாம் பாலினத்தவர்:8, மொத்த வாக்காளர்கள் 294636 பேர்கள் உள்ளனர். 222. தென்காசி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 145120,பெண் வாக்காளர்கள் 152094,மூன்றாம் பாலினத்தவர்: 42,மொத்த வாக்காளர்கள் 297256 பேர்கள் உள்ளனர். 223. ஆலங்குளம் தொகுதியில் ஆண் வாக்காளர்கள்: 127879, பெண் வாக்காளர்கள்: 136661,மூன்றாம் பாலினத்தவர்: 7,மொத்த வாக்காளர்கள் 264547 பேர்கள் உள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் சேர்த்து ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 661545, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 694113, மூன்றாம் பாலினத்தவர்: 66,மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1355724 ஆக உள்ளது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பதிவு செய்வதற்கு மற்றும் ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்வதற்கு படிவம்-6, இந்திய கடவுச்சீட்டு வைத்திருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் பதிவு செய்வதற்கு படிவம் 6A, ஏற்கனவே பதிவு செய்துள்ள பெயரினை நீக்கம் செய்வதற்கு அல்லது வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் சேர்ப்பு குறித்து ஆட்சேபனை தெரிவிக்க படிவம்-7, வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை மாற்றம் அல்லது திருத்தம் செய்வதற்கு படிவம்-8, ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்வதற்கு படிவம்-8A இல் விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும். ஜனவரி 1,2022 அன்று அல்லது அதற்கு முன்பு 18 வயது பூர்த்தி அடைந்த வாக்குச்சாவடி பகுதியில் சாதாராணமாக வசித்து வரும் இந்திய குடிமக்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது (பொ) சி.ராஜமனோகரன்,தேர்தல் வட்டாட்சியர் ஜெ.கங்கா உட்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்டஅரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com