Home செய்திகள் விடுதிகளில் சேரும் மாணவர்களின் பெற்றோர் வருமான வரம்பு ரூ.2 லட்சமாக உயர்வு;தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..

விடுதிகளில் சேரும் மாணவர்களின் பெற்றோர் வருமான வரம்பு ரூ.2 லட்சமாக உயர்வு;தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..

by mohan

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேரும் மாணவ,மாணவிகளின் பெற்றோர் வருமானம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:தென்காசி மாவட்டத்தில் 29 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கையை அதிகரித்து அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலவிடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பை ரூ.1 இலட்சத்திலிருந்து ரூ.2 இலட்சமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தென்காசி மாவட்டத்தில் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/ சிறுபான்மையினர் விடுதிகளில் மாணவர்/ மாணவியர் சேர்க்கை பெற உயர்த்தப்பட்ட வருமான வரம்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை 8344280895 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!