Home செய்திகள் வடகிழக்கு பருவமழை எதிரொலி; தயார் நிலையில் தென்காசி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை..

வடகிழக்கு பருவமழை எதிரொலி; தயார் நிலையில் தென்காசி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை..

by mohan

தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில்தென்காசி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் கவிதா உத்தரவு படி தென்காசி மாவட்டத்தில் மழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடரை எதிர் கொள்ளும் வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் அனைத்து நிலையங்களிலும் உபகரணங்களுடன் முழுவீச்சில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தயார் நிலையில் உள்ளது. மேலும் வெள்ளம் சூழ்ந்து உள்ள குடியிருப்பு பகுதிகளில் சிக்கும் நபர்களை பாதுகாப்பாக மீட்க ஏதுவாக ரப்பர் படகுகள் மற்றும் மோட்டார் படகுகள், சாலைகளில் விழும் மரங்களை அகற்ற மின்விசை ரம்பங்கள், குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்ற நீர் இறைக்கும் பம்புகள் மற்றும் மீட்பு பணிக்கான கயிறுகள், லைப் ஜாக்கெட் உள்ளிட்ட கருவிகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் தீயணைப்பு நீச்சல் வீரர்கள் மற்றும் கயிறு மூலம் மீட்பு பணி மேற்கொள்ள பயிற்சி பெற்ற இரண்டு கமாண்டோ படைகள் முழுவீச்சில் தயார் நிலையில் உள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை அடையாளம் காட்டும் கருவிகள் ரோப் லான்சர், ரைடர் மற்றும் இமேஜிங் கேமரா ஆகியவை தயார் நிலையில் உள்ளது. வெள்ள காலங்களில் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் பொருட்டு தகவல் தொடர்பு சாதனங்களான வாக்கிடாக்கி போன்றவை தயார் நிலையில் உள்ளது. தாழ்வான பகுதிகள் வெள்ளநீர் புகும் குடியிருப்புப் பகுதிகள் போன்றவை கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாதிரி ஒத்திகை பயிற்சி நடத்தி பொது மக்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடும் மழை மற்றும் வெள்ள காலங்களில் பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் வானிலை ஆய்வு மையத்தின் தகவல் பெற்று அன்றாட வானிலை நிலைமைக்கு ஏற்ப மீட்புப் பணிக்காக திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. மேலும் தீயணைப்புத்துறை மூலம் தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு பேரிடர் காலங்கள் மற்றும் தீ விபத்து மற்றும் மீட்பு பணி அழைப்புகளில் பயன்படுத்த தக்க வகையில் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!