Home செய்திகள் பொதுமக்கள் மாசற்ற வகையில் தீபாவளியை கொண்டாட வேண்டும்; தென்காசி ஆட்சியர் வேண்டுகோள்..

பொதுமக்கள் மாசற்ற வகையில் தீபாவளியை கொண்டாட வேண்டும்; தென்காசி ஆட்சியர் வேண்டுகோள்..

by mohan

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற வகையில் தீபாவளியை கொண்டாடும் படி மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கோபால சுந்தரராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே வேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவைகள் பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் ஏற்படும் மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய் வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.சுற்றுச் சூழலை, பாதிப்பு இல்லாமல், பேணிக் காக்க பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். பொதுமக்கள் திறந்த வெளியில் காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில், வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தினரால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!