Home செய்திகள் போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு..

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு..

by mohan

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் கடந்த (06/07/2021) அன்று ராஜபாளையத்தை சேர்ந்த ராமலட்சுமி என்பவர் தனக்கு சொந்தமான இடம் திருவேங்கடத்தில் உள்ளதாகவும், தனது இடத்தை திருவேங்கடத்தை சேர்ந்த சுபா என்பவர் போலி ஆவணங்கள் கொண்டு அவருடையது என உரிமை கொண்டாடுவதாகவும், தனது இடத்தை மீட்டு கொடுக்குமாறும் கொடுத்த புகாரின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் (DCB) ஆரோக்கியராஜ் தலைமையில் காவல் ஆய்வாளர்(ALGSC) சந்தி செல்வி விசாரணை மேற்கொண்டு ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு ராமலட்சுமி க/பெ சுப்புராம் என்பவரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அபகரிக்கப்பட்ட நிலத்தை உரிய முறையில் விசாரணை மேற்கொண்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com