Home செய்திகள் கள்ளச்சந்தையில் விற்க மது பாட்டில்கள் பதுக்கல்;115 நபர்கள் ஒரே நாளில் கைது-தென்காசி எஸ்.பி அதிரடி..

கள்ளச்சந்தையில் விற்க மது பாட்டில்கள் பதுக்கல்;115 நபர்கள் ஒரே நாளில் கைது-தென்காசி எஸ்.பி அதிரடி..

by mohan

தென்காசி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 115 நபர்கள் கைது செய்யப்பட்டு 3982 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள்,போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 03.10.2021 அன்று ஒரே நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில் விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 115 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 3982 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக ரோந்து பணியில் ஈடுபட்டு கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்பவர்களை கைது செய்த காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். முன்னதாக, நம் நாட்டில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரிலும், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அறிவுறுத்தலின் பேரிலும் தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூடும் முக்கிய பகுதிகளான ATM மையங்கள், பேருந்து நிலையங்கள், கோவில்கள், பலசரக்குக் கடைகள் ஆகிய பகுதிகளில் சைபர் கிரைம் குற்றங்கள் நடந்தால் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும், இணையதளம் மூலமாக பண மோசடி நடைபெற்றால் 155260 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக போஸ்டர்கள் ஒட்டி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், தென்காசி மாவட்ட எஸ்.பி.உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com