ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த தென்காசி மாணவி;மாவட்ட எஸ்.பி பாராட்டு..

ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற தென்காசியை சேர்ந்த மாணவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். தென்காசி, அலங்கார் நகரை சேர்ந்த சண்முகவள்ளி என்ற மாணவி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) மூலம் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் இந்திய அளவில் 108 வது இடத்தையும், தமிழக அளவில் 3 வது இடத்தையும், பெண்கள் பிரிவில் தமிழகத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். தேர்வில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாணவி சண்முகவள்ளிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அவரை ஊக்குவிக்கும் விதமாக தனது வாழ்த்துக்களை கூறி பாராட்டுச் சான்றிதழும் புத்தகமும் வழங்கினார். மேலும் பணியில் நேர்மையுடனும் விழிப்புடனும் இருந்து திறம்பட செயல்பட்டு மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்தி

உதவிக்கரம் நீட்டுங்கள்..