தென்காசி அரசு டாக்டர்கள் சங்க பொதுக்கூட்டம்; கலெக்டரிடம் முக்கிய கோரிக்கை மனு அளிக்க முடிவு..

தென்காசி அரசு டாக்டர்கள் சங்க பொதுக்கூட்டம் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடந்தது. அதில் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவரும், மாநில செயலாளருமான மருத்துவர் ஜெஸ்லின் தலைமையில், மாவட்ட செயலாளர் மருத்துவர் செந்தில் சேகர், மாவட்ட பொருளாளர் மருத்துவர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் முன்னிலையில் டாக்டர்கள் சங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் தென்காசி மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களும்,அரசு மருத்துவனை மருத்துவர்களும் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு இழைக்கப்படும் பணிச்சுமை குறித்து விவாதிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் விபத்தில் இறந்த இரு மருத்துவர்களுக்கான இழப்பீடு சம்பந்தமான கோப்பில்,நான்கு மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு குறித்து வருத்தம் தெரிவிக்கப்பட்டது.க்ஷமேலும் வருகின்ற திங்கள் கிழமை கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அவர்களிடமும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடமும் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய கடிதம் அளிக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. DPH Wing மாவட்ட செயலாளர் மருத்துவர் சிந்தன் மேல் படிப்பிற்காக சென்னை சென்றுள்ளதால் தென்காசி மாவட்ட DPH Wing புதிய மாவட்ட செயலாளராக தென்காசி வட்டார மருத்துவ அலுவலர் மரு. இப்ராகிம் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கணினி ஒருங்கிணைப்பாளராக மருத்துவர் தயாளன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மருத்துவர்களுக்கும் மாவட்ட செயலாளர் மருத்துவர் செந்தில் சேகர் நன்றியை தெரிவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்