
தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியின் புதிய முதல்வராக லதா பூரணம் பொறுப்பேற்றார். சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி முதல்வராக பணியாற்றிய முனைவர் பாஸ்கரன் திருநெல்வேலி மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று சென்றார். கல்லூரி பொறுப்பு முதல்வராக கணிதவியல் துறை தலைவர் ஜெயா செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரிக்கு புதிய முதல்வராக லதா பூரணம் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கௌரவ விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள், சுரண்டை நகர திமுக செயலாளர் ஜெயபாலன், சுரண்டை ஒய்எம்சிஏ செய்தி தொடர்பாளர் ராஜகுமார் மற்றும் ஊர் பெரியவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.