
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தென்காசி மாட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் மற்றும் துணைஇயக்குநர் சுகாதார பணிகள் மரு.அனிதா ஆகியோர்களின் உத்தரவின் படி ஆலங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் மரு.குத்தாலராஜ் மற்றும் மருத்துவ அலுவலர் மரு.முகமது தாரிக் தலைமையில் மருத்துவ குழுவினரால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 52 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டு மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என தென்காசி அரசு மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்டது. மேலும் மாறாந்தை மற்றும் சுற்றுப்புற கிராமங்களான புதூர், உடையாம்புளி, செட்டிகுறிச்சி, நாலாங்குறிச்சி கிராமங்களிலும் காய்ச்சல் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக அரசு மருத்துவமனையினை தொடர்பு கொள்ளுமாறு மருத்துவ அலுவலர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.