புளியங்குடி பகுதியில் செல்போன் கடையை உடைத்து கொள்ளை3 நபர்கள் அதிரடி கைது.

புளியங்குடி பகுதியில் செல்போன் கடையை உடைத்து திருடிய 3 நபர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்த புளியங்குடி காவல்துறையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையை மர்ம நபர்கள் உடைத்து அதிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான செல்போன்களை கொள்ளை அடித்ததுடன், மேலும் மற்றொரு கடையிலும் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் இருந்து வந்த நிலையில் புளியங்குடி காவல் ஆய்வாளர் ராஜாராம் தலைமையிலான காவலர்கள் மற்றும் தனிப்படையினர் துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் கொள்ளையர்களை சுற்றி வளைத்து கொள்ளையடித்த 3 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.காவலர்களின் இச்செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உதவிக்கரம் நீட்டுங்கள்..