
தென்காசி மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களிடையே கொரோனா மூன்றாம் அலை குறித்தும்,பாதுகாப்புடன் இருப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.மேலும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து தேவையான தீர்வுகளையும் வழங்கி வருகின்றனர். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் பொதுமக்களிடம் கொரோனா மூன்றாவது அலை பரவ துவங்கியுள்ளதால் பொது மக்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் மாலை நேரங்களில் காவல் துறையினர் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்தே சென்று அப்பகுதியில் உள்ள சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை எச்சரித்தும், பொது மக்களிடம் அவர்களின் குறைகளை நேரில் கேட்டும் தீர்வு வழங்கி வருகின்றனர்.
You must be logged in to post a comment.