தென்காசி அருகே கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்.

தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.இதில் கொரோனாவை தடுக்கும் பொருட்டு உறுதி மொழி ஏற்கப்பட்டது. தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கோபால சுந்தரராஜ், திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ப.குற்றாலிங்கம் ஆகியோர்களின் அறிவுரைகளின் படி, கொரோனா தொற்று நோய் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு ஆய்க்குடி பேரூராட்சி அலுவலகத்தில் வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன், சுகாதார ஆய்வாளர்கள் மாரியப்பன், கணேசன் மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர் சொக்கலிங்கம் ஆகியோர்கள் முன்னிலையில் நடந்தது. இதில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கைகழுவுதல் குறித்த செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. அதன் பின்பு பொது இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முககவசம் அணியவும், மற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சம் 6அடி இடைவெளியை கடைபிடிக்கவும், சோப்பும் தண்ணீரும் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்வேன் தடுப்பூசி எடுத்துக் கொள்வதோடு மற்றவர்களையும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள ஊக்கப்படுத்துவேன் என உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த உயிர்கொல்லி வைரஸ் பரவுவதை தடுக்க அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைபிடிப்பேன். மற்றவர்களையும் கொரோனாவிற்கு பொருத்தமான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்துவேன். கொரோனா மூன்றாம் அலையினை தடுக்க எப்பொழுதும் விழிப்புடன் இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்