Home செய்திகள் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற அழகு பூச்செடிகள் நடும் நிகழ்ச்சி..

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற அழகு பூச்செடிகள் நடும் நிகழ்ச்சி..

by mohan

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் போது நிழல் தரும் மரக்கன்றுகள் மற்றும் அழகு பூச்செடிகள் நடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியின் ஓரங்களில் அழகு பூச்செடிகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. தென்காசி சாந்தி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் தமிழரசன் சுமார் 800 அழகு பூச்செடிகளை வழங்கினார். இந்த பூச்செடி கன்றுகள் அரசு தலைமை மருத்துவமனையின் முகப்பு நுழைவு வாயில் பகுதியில் புதிதாக போடப்பட்டுள்ள சாலையின் ஓரத்தில் நடப்பட்டது.இந்த நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எக்ஸ்னோரா செயலாளர் சங்கரநாராயணன் செய்திருந்தார்.மேலும் ஒரு மாதத்திற்கு முன்னர் எக்ஸோனரா அமைப்பின் மூலம் சுமார் 300 செடிகள் நடப்பட்டது. இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கூறுகையில்,இந்த அழகு பூச்செடிகள் மருத்துவமனைக்கு வருபவர்கள் மனதில் அமைதியை ஏற்படுத்தும் என்றார். இந்த நிகழ்வில் தென்காசி சாந்தி மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் தமிழரசனுக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் நன்றி கூறினார். அழகு பூச்செடிகள் நடும் நிகழ்வில் மருத்துவர் தமிழரசன், திருமதி சுமதி ஜெஸ்லின், மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!