Home செய்திகள் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்…

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்…

by mohan

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் வகையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. கொரோனோ பெருந்தொற்றை தடுக்கும் பல வழிமுறைகளில் பிரதான வழிமுறைகளில் ஒன்றான தடுப்பூசி முகாம்கள் பல கட்டங்களில் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக சுகாதாரத் துறையினர் மற்றும் களப்பணியாளர்களுக்கும், இரண்டாவது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் இணை நோய் உள்ளவர்கள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காகவும், அடுத்தகட்டமாக 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. முதல் தவணை செலுத்தியவர்கள் ஒரு லட்சத்தி தொன்னூற்றொன்பதாயிரத்து முன்னூற்று ஐம்பது 1,99,350 பேரும், இரண்டாவது தவணை 30,581 முப்பதாயிரத்து ஐனூற்றியெண்பத்தோர் பேர்களுக்கும் கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த கட்டமாக பாலூட்டும் தாய்மார்களுக்கு என சிறப்பு தடுப்பூசி முகாம் 17 .6 .2021 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 9.7.2021 வெள்ளிக்கிழமை கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் தென்காசி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.தென்காசி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை இணை இயக்குநர் நலப்பணிகள் நெடுமாறன் தொடங்கி வைத்தார்.துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மருத்துவர் அருணா, துணை இயக்குனர் குடும்ப நலம் மருத்துவர் ராமநாதன் தலைமை ஆகியோர் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினர். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் முன்னிலையில் முகாம் நடைபெற்றது. அனைவரும் பங்கு பெற்ற இந்த முகாமில் 71 கர்ப்பிணிப் பெண்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முகாமில் உறைவிட மருத்துவர் அகத்தியன், மகப்பேறு மருத்துவர் அனிதா பாலின், மருத்துவர் கீர்த்தி, மருத்துவர் தேவி உத்தமி,செவிலிய கண்காணிப்பாளர் கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உடனிருந்தனர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகமும், சுகாதாரத் துறையை சார்ந்த பணியாளர்கள் அனைவரும் செய்திருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com