Home செய்திகள் காயிதே மில்லத் பிறந்த தின விழா; ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கல்..

காயிதே மில்லத் பிறந்த தின விழா; ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கல்..

by mohan

“தமிழே ஆட்சி மொழி” என்று முழங்கி தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த கண்ணியத்திற்குறிய காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப் 126-வது பிறந்த தின விழா நாடு முழுவதும் நிவாரண உதவிகள் வழங்கி கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் காயிதே மில்லத் பிறந்த தின விழா உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் தென்காசி நகர் பகுதிகளில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு நகர்ப்புறம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நகரத் தலைவர் அபூபக்கர், மாநிலப் பேச்சாளர் முகமது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் புளியங்குடி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காயிதே மில்லத் பிறந்த தினவிழா நகரத் தலைவர் அப்துல் வகாப் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் கலீல் ரஹ்மான், துணைச் செயலாளர் அப்துல் வகாப், அப்துல் ரஹீம், காஜா மைதின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் ஹபீபுல்லாஹ் வரவேற்றார். முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் உசேன் முஸ்லிம் லீக் கொடியேற்றி வைத்தார். மாவட்டத்தலைவர் செய்யது சுலைமான் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பயனாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார். முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய இணைச்செயலாளர் புளியங்குடி அல் அமீன் சிறப்புரையாற்றினார். விழாவில் முஸ்லிம் மாணவர் பேரவை மாவட்டத் தலைவர் அபுசாலி, மைதின் பிச்சை, அப்துல் அஜீஸ், பிஸ்மி முகைதின், குன்னங்குளம் சிறு ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் அயூப்கான், முகம்மது இப்ராஹிம், மணிச்சுடர் சாகுல் ஹமீது உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. முடிவில் நகரப் பொருளாளர் முகம்மது சுலைமான் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com