Home செய்திகள் சுரண்டை சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்..

சுரண்டை சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்..

by mohan

தென்காசி மாவட்டம் சுரண்டை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. சுரண்டை அருகே உள்ள ஆய்க்குடி தேர்வுநிலை பேரூராட்சியில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ள நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியர் டாக்டர்.சமீரன் மற்றும் திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் எஸ்.சேதுராமன் ஆகியோர்களின் அறிவுறுத்துதலின் படியும் கொரோனா நோய் தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சங்கரநாராயணன் வழிகாட்டுதலின் படியும் ஆய்க்குடி பேரூராட்சி பகுதி முழுவதும் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 18 வயது முதல் 44 வரையுள்ள வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் ஆய்க்குடி பேரூராட்சி செயல் அலுவலர்.ஜா.மாணிக்கராஜ் தலைமையின் கீழ் ஆய்க்குடி பிரதான சாலையில் அமைந்துள்ள பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக் கூடத்தில் வைத்து பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு பொது மக்களுக்கு சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம் (18 வயது முதல் 44 வயது வரை உள்ள நபர்களுக்கு மட்டும்) நடைபெற்றது. முகாமில் 360 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி குறித்து ஒலிபெருக்கி மற்றும் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆய்க்குடி பேரூராட்சி செயல் அலுவலர்.ஜா.மாணிக்கராஜ், தென்காசி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மணிகண்டன், இளநிலை பொறியாளர் கோபி, செங்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்செல்வி , மருத்துவ அலுவலர் பேராச்சி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன், சுகாதார ஆய்வாளர்கள் மாரியப்பன், கணேசன் , செவிலியர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.வீ.கே.புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட வீராணத்தில் மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவுக்கு ஏற்ப தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாதன் வழிகாட்டுதலில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் வீராணம் சேக் தலைமை வகித்து முகமது தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். வட்டார சுகாதார மருத்துவர் டாக்டர் குத்தால ராஜ், சுகாதார ஆய்வாளர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி முகாமிற்கு வந்த அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. கிராம சுகாதார செவிலியர் மேரி, தங்கதுரைச்சி, வீராணம் கிளை செயலாளர் பாலசுப்பிரமணியன், திமுக பிரதிநிதி பாலமுருகன், அமானுல்லா, செய்யது இப்ராகிம், முகமது முஸ்தபா, தமுமுக மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் முத்தலிபு மற்றும் கழக நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.சுந்தர பாண்டியபுரம் பகுதியில் பேரூராட்சி மற்றும் சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமில் தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் செயல் அலுவலர் மு.அமாணுல்லா, மருத்துவ அலுவலர் சுகன்யா, மற்றும் சுகாதார ஆய்வாளர் மதிவாணன். நகர காங்கிரஸ் நிர்வாகிகள் முத்துவேல், பால்கன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com