Home செய்திகள் கடையநல்லூரில் கொரோனா பேரிடர் மையமாக மாறிய பள்ளிவாசல்; தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு எம்எல்ஏ பாராட்டு..

கடையநல்லூரில் கொரோனா பேரிடர் மையமாக மாறிய பள்ளிவாசல்; தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு எம்எல்ஏ பாராட்டு..

by mohan

கொரோனா பெருந்தொற்று இந்தியா முழுவதும் பல்வேறு பாதிப்புகளையும், இழப்புகளையும் ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மக்களை காக்கும் பொருட்டு தமிழகம் முழுவதுமுள்ள 600 பள்ளிவாசல்களை கொரோனா கேர் சென்டராக மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள மரியம் பள்ளிவாசலை கொரோனா பேரிடர் உதவி மையமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாற்றியது. இந்த உதவி மையத்தில் அவசர தேவைக்காக ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், கையடக்க ஆக்ஸிஜன் கெலன்கள், ஆக்ஸிஜன் உருளைகள்,ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவைகள், மருத்துவமனை தகவல் மற்றும் வழிகாட்டுதல்கள்,பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் பரிசோதனை,

கபசுர குடிநீர், உயிரிழந்த உடல்களை நல்லடக்கம் செய்தல், நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள்,அவசர கால இரத்ததானம், மேலும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து பேரிடர்கால சேவை பணிகள் இந்த உதவி மையத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்படும் வகையில் பல்வேறு மருத்துவ சேவைகளை முன்னெடுத்து வருகின்றது. தற்போது கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான உபகரணங்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மையத்தை வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற கொரானொ தடுப்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் சதன் திருமலைக்குமார் திறந்து வைத்தார். அதன்பின் தவ்ஹீத் ஜமாத்தின் இந்த கொரோனா கால சேவைகளை தமிழக முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்வேன் என்றார். இந்நிகழ்ச்சிக்கு மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துன் நாசர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துல் பாசித், பொருளாளர் செய்யது மசூது சாஹிப், துணைச் செயலாளர்கள் அப்துல் சலாம் , புகாரி,துணைத் தலைவர் அப்துல் காதர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடையநல்லூர் தாசில்தார் ஆதிநாராயணன், துணை தாசில்தார் ஞானசேகர் கொரோனா சேவை மையத்தை பார்வையிட்டு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை பாராட்டி அறிவுரை வழங்கினார்.கொரோனா பேரிடர் கால உதவி மையம், டிஎன்டிஜே-003, தென்காசி மாவட்டம். தொடர்புக்கு: 9597705763

ஆக்ஸிஜன் தேவைக்கு:9976122408, 7200000477

மருத்துவமனை தகவல் மற்றும் வழிகாட்டுதல்: 95973 40450,8070523234

கபசுர குடிநீர் வழங்குதல் :8870704541

இறந்தவர் உடல் அடக்கம் செய்ய:9597705763,7373505070

நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளுக்கு: 9715245822

அவசர கால இரத்ததானம்: 8870523234.உள்ளிட்ட அவசர உதவி எண்களை மாவட்ட நிர்வாகிகள் வெளியிட்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!