Home செய்திகள் சங்க கால தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றவர் பாரதி”; இணையவழி தமிழ் கருத்தரங்கில் எழுத்தாளர் நாறும்பூநாதன் பேச்சு…

சங்க கால தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றவர் பாரதி”; இணையவழி தமிழ் கருத்தரங்கில் எழுத்தாளர் நாறும்பூநாதன் பேச்சு…

by mohan

மகாகவி பாரதியின் படைப்புகளை இளைய தலைமுறையினர் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் பன்னாட்டுக் கருத்தரங்கம், கவியரங்கம் மற்றும் போட்டிகளை நடத்திவரும் பொதிகைத் தமிழ்ச் சங்கம் இப்போது நெல்லை அரசு அருங்காட்சியத்தோடு இணைந்து வாரந்தோறும் உரையரங்க நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இணைய வழியில் நடந்த இந்நிகழ்ச்சியின் இரண்டாம் வார நிகழ்ச்சி புதன் கிழமை மாலை இணையவழியில் நடந்தது. இதில் சிறப்புரையாற்றிய எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் “சங்க கால தமிழ் இலக்கியங்களிலும் புலமை பெற்றவரே பாரதி “எனப் பேசினார். நிகழ்ச்சியில் நெல்லை அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி வரவேற்புரை வழங்கினார். இணைய வழி நிகழ்வில் முதலாவதாக திருச்செந்தூர் சிவந்தி கல்வியியல் கல்லூரி மாணவி வனச்செல்வி பேசினார். நிகழ்ச்சியில் தொடர்ந்து எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். அவர் பேசுகையில் “கவிதைகளை மட்டுமின்றி நிறைய கட்டுரைகளையும் எழுதியவர் பாரதி. பத்திரிக்கைகளில் கட்டுரை எழுதுபவராக மட்டுமின்றி பத்திரிக்கை நடத்துபவராகவும் விளங்கியவர் பாரதி. அவர் தன் கவிதைகளில், கட்டுரைகளில் சொன்னவற்றை யெல்லாம் அப்படியே செய்து காட்டினார். பெண் கல்வி பற்றி பேசிய பாரதி கடையத்தில் ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியில் தன் மகளைப் படிக்க வைக்க சண்டையிட்டு உரிமையைப் பெற்றார். பாரதி சங்க இலக்கியங்களிலும் புலமை பெற்றவராக விளங்கியவர் தான். புறநானூறு, தொல்காப்பியம் உட்பட சங்க இலக்கியங்களிலும் புலமைப் பெற்றிருந்தார் பாரதி “எனக் குறிப்பிட்டார். பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ்ச் செம்மல் கவிஞர் பேரா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நெல்லை அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி, பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ்ச் செம்மல் கவிஞர் பேரா ஆகியோர் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பா.வேலம்மாள், தர்மபுரி சங்க இலக்கிய ஆய்வு நடுவம் தலைவர் நாகராஜ்,துபாய் தமிழ் அறிஞர் முனைவர் முகமது முகைதீன் உட்பட பல தமிழ் ஆர்வலர்களும், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ மாணவிகளும் திரளாக இணையவழி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!