Home செய்திகள் வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்;சுரண்டை பேரூராட்சி ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் வலியுறுத்தல்..

வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்;சுரண்டை பேரூராட்சி ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் வலியுறுத்தல்..

by mohan

கொரோனாவை கட்டுப்படுத்த வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுரண்டை பேரூராட்சி ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் வலியுறுத்தினர். தமிழகத்தில் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு காய்கறி பொருட்களை வீடுகள் தோறும் விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி பகுதிகளில் காய்கறிகளை‌ வண்டிகள் மூலம் வீடுதோறும் விற்பனை செய்யும் ஆலோசனை கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். சுரண்டை பேரூராட்சி நிர்வாக அதிகாரி வெங்கட கோபு காய்கறி விற்பனை தொடர்பான விளக்கங்களை அளித்தார். சுரண்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ்  , வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இகக்கியப்பா, சுரண்டை ஆர்ஐ மாரியப்பன், கீழப்பாவூர் வட்டார தோட்டக்கலை துறை அலுவலர் கோவிந்தராஜ், சுரண்டை சிவகுருநாதபுரம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எஸ் கே டி ஜெயபால், துணை தலைவர் கணேசன், சுரண்டை காமராஜர் மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ், ஏ கே எஸ் சேர்ம செல்வம், தெய்வேந்திரன் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காய்கறி பொருட்களை வியாபாரிகள் வாகனங்களின் மூலம் வீடுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டும் எனவும், விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும், விளைபொருட்களை கொண்டு வரும் விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் தோட்டக் கலைத்துறை மூலம் அடையாள அட்டை வழங்கப்படும், என்பது குறித்தும் விளக்கப்பட்டது.மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்களிடையே வியாபாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com