Home செய்திகள் தென்காசி மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்..

தென்காசி மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்..

by mohan

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பின்வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக தென்காசி மாவட்டம் முழுமைக்கும் முழு ஊரடங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.144 தடை அமலில் உள்ளதால் பொது இடங்களில் 5 அல்லது அதற்கு மேலான நபர்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது. அத்தியாவசிய தேவையின்றி மளிகை,காய்கறி,தேநீர் மற்றும உணவகங்களில் கூடி அமர்ந்து பேசுவதை தவிர்க்குமாறும், அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளன்றி தங்களது வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு காய்ச்சல்,இருமல், உடல்வலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக அறியும் பட்சத்தில் அருகில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு மையங்கள் அல்லது அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை தொடர்பு கொண்டு உடல்நலனை பாதுகாக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. உணவகங்களிலோ அல்லது தேநீர் கடைகளிலோ அமர்ந்து உணவருந்த அனுமதி கிடையாது. தேவைகளன்றி வெளியே வருபவர்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் தேவையின்றி கூடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்புகள் குறித்து அனைவரும் அறிய வேண்டும். இந்த நோயின் தாக்கம் குறித்து பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள அனைவரும் தெரிந்து கொள்ளும் படி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தங்களது குழந்தைகளை பாதுகாப்பான முறையில் வீடுகளை விட்டு வெளியே அனுப்பாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி தெரிவிக்கவும், தங்கள் உடல் நலனில் கவனம் செலுத்தி இந்த நோய்த் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஊரடங்கின் போது வீட்டில் உள்ளவர்கள் வெளியே செல்லாமல் இருக்கவும்,குறிப்பாக வயதானவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொது இடங்களில் ஆங்காங்கே சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் 5 நபர்களுக்கு மேல் கூடி இருப்பதனால் இந்த நோய்த்தொற்று அதிகம் பரவக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.எனவே இந்த சூழ்நிலையை தவிர்த்து பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வீட்டை விட்டு வெளியே வராமலிருக்கவும், அவ்வாறு அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வரும் பட்சத்தில் கண்டிப்பாக முககவசம் அணிந்து வெளியே வரவும் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடித்து கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com