Home செய்திகள் கடையநல்லூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்;அமமுக வேட்பாளர் தேர்தல் பரப்புரை

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் அய்யாத்துரை பாண்டியன் ஆகிய நான் வெற்றி பெற்றால் கடையநல்லூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் என்று உறுதிபட கூறினார்.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் அய்யாத்துரை பாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஆய்க்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் பாதிரியாரிடம் வாழ்த்து பெற்று பின்னர் அங்கு திரண்டு வந்த கிறிஸ்தவ மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். அதனைத் தொடர்ந்து ஆய்க்குடி பேரூராட்சி சாம்பவர் வடகரை பேரூராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து குக்கர் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: கடையநல்லூர் தொகுதிக்கு நான் புதியவன் அல்ல, கடந்த ஓராண்டு காலமாக கடையநல்லூர் தொகுதி மட்டுமல்ல தென்காசி மாவட்டம் முழுவதும் சென்று அந்த மக்களின் கோரிக்கைகள் தேவைகள் பற்றி அறிந்துள்ளேன்.எனவே கடையநல்லூர் சட்டமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் எனக்கு நீங்கள் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்தால் நிச்சயமாக கடையநல்லூர் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவும், கடையநல்லூர் தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி தரவும் நான் அயராது பாடுபடுவேன். நான் ஜாதி மத இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன் என்பதை நீங்கள் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். என்னுடைய சுயலபத்திற்காக அரசியலுக்கு வரவில்லை. கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் இந்த தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற அயராது பாடுபடுவேன். குறிப்பாக கடையநல்லூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் வனவிலங்குகள் புகுந்து அடிக்கடி விளை நலங்களை நாசப்படுத்தி வருவதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் நான் வெற்றி பெற்றால் விவசாய நிலங்களில் வன விலங்குகள் புகுந்து நாசம் செய்வதை தடுக்க தடுப்பு வேலிகள் அமைப்பது வனத்துறையினரின் உதவியோடு வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வருவதை தடுக்க முழு முயற்சி மேற்கொள்வேன். மேலும் கடையநல்லூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை சீரமைத்து அனைத்து சிறப்பு மருத்துவர்களும் நியமனம் செய்யப்பட்டு சிறப்பான மருத்துவமனையாக செயல்பட உரிய நடவடிக்கை மேற்கொள்வேன். மேலும் கடையநல்லூர் தொகுதியில் உள்ள படித்த பட்டதாரிகள் இளைஞர்கள் ஆகியோர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கித் தரவும் விளையாட்டு துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உரிய முறையில் பயிற்சி அளித்து அவர்களை மாநில அளவில் இந்திய அளவில் முடிந்தால் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறவும் வெற்றி பெறவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன், அமமுக மாவட்ட அவைத்தலைவர் பெருமையா பாண்டியன்,அமமுக ஒன்றிய செயலாளர்கள் கடையநல்லூர் பெரியதுரை, செங்கோட்டை லியாகத் அலி, நகர செயலாளர் கமாலுதீன், சார்பு அணி நிர்வாகிகள் சேக் முகமது மீரான், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கோதர்ஷா, இளைஞரணி செயலாளர் ராஜேஷ், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் சுரேஷ் என்ற சுப்பிரமணியன், பொன்னுச்சாமி ராமர் பாண்டியன், தீ கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜா மறவன், தேமுதிக நகர செயலாளர் சரவணன், எஸ்டிபிஐ தொகுதி பொறுப்பாளர் யாசர்கான் மற்றும் அமமுக தேமுதிக எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆய்க்குடி, சாம்பவர் வடகரை, கடையநல்லூர் நகர பகுதிகளில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்கள் முக்கிய பிரமுகர்களை சந்தித்து குக்கர் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன், அமமுக மாவட்ட அவைத்தலைவர் பெருமையா பாண்டியன்,அமமுக ஒன்றிய செயலாளர் , நகர செயலாளர் கமாலுதீன், சார்பு அணி நிர்வாகிகள் வடகரை சேக் முகமது மீரான், கோதர்ஷா, ராஜேஷ், பொன்னுச்சாமி ராமர் பாண்டியன், தீ கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜா மறவன், தேமுதிக நகர செயலாளர் சரவணன், எஸ்டிபிஐ தொகுதி பொறுப்பாளர் யாசர்கான் மற்றும் அமமுக தேமுதிக எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!