Home செய்திகள் சுரண்டையில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி;பேரன்புரூக் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு.

தென்காசி மாவட்டம் சுரண்டையில் பங்களாச் சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பங்கேற்ற டெங்கு தடுப்பு விழிப்புணர்வு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை வீரகேரளம்புதூர் தாசில்தார் வெங்கடேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கீர்த்திகா, சுரண்டை பேரூராட்சி நிர்வாக அதிகாரி வெங்கட கோபு, பள்ளி தலைமை ஆசிரியர் சொந்தராஜன் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர் ‌பங்களாச் சுரண்டை பள்ளியில் இருந்து கீழச்சுரண்டை, அரண்மனை, அண்ணா சிலை, காமராஜர் சாலை, செங்கோட்டை ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாணவர்கள் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு கோசங்களை எழுப்பிய நிலையில், துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். பேரணியின் போது டெங்கு பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பாவூர்சத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கீர்த்திகா  அறிவுரைகள் வழங்கினார். பேரணியில் சுரண்டை வருவாய் ஆய்வாளர் நா.மாரியப்பன்,ரா கிராம நிர்வாக அலுவலர்கள் வெள்ள பாண்டி, ஆறுமுகம், கருப்பசாமி, கிராம உதவியாளர்கள் ஜேம்ஸ், கற்பகம், பரமசிவபாண்டி, மாரியம்மாள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அதிசயராஜ், ஆசிரியர்கள் சௌந்தர், சாமுவேல், சுகுமார், செல்வராஜ், விக்டர் ஜோயல், ஜெப எபனேசர், வேல்சாமி செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com