Home செய்திகள் ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில் முககவசம் அணியாதோரிடம் ரூ 20,600/- அபராதம் வசூல்;அதிகாரிகள் அதிரடி..

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களிடம் அதிகாரிகள் அபராதம் வசூலித்தனர்.தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.சமீரன்  உத்தரவின் படியும் திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அறிவுரைகளின் படியும் கொரோனா தொற்று காரணமாக விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முககவசம் அணியாமல் வாகனங்களில் வருவோர்களிடம் ஆய்க்குடி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர் கணேசன், ஆய்க்குடி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் பலவேசம், சுகாதார மேற்பார்வையாளர் (பொ) ச.தர்மர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஆய்க்குடி காவல் நிலையம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்களிடம் கடந்த இரு தினங்களாக சோதனையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களில் முககவசம் அணியாமல் வாகனங்களில் வந்த 103 நபர்களிடமிருந்து ரூ. 20600 /- அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. மேலும் முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வரக்கூடாது எனவும், கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்திடவும் செயல் அலுவலர்.ஜா.மாணிக்கராஜ் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com