
தென்காசி மாவட்டம் சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கொரோனா தடுப்பு ஊசி மையத்தில் கொரோனா தடுப்பு ஊசி விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிகழ்ச்சியில் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தலைமை வகித்து கொரோனா தடுப்பு ஊசியின் அவசியம் குறித்து பேசினார்.வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கீர்த்திகா தலைமையிலான மருத்துவ குழுவினர் தடுப்பு ஊசிகளை போட்டனர். தொடர்ந்து கொரோனா தடுப்பு ஊசி தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் சுரண்டை மருத்துவ அலுவலர் டாக்டர் அருள் ஜோதி, வட்டார சுகாதார மேற்ப்பார்வையாளர் இசக்கியப்பா, சுகாதார ஆய்வாளர்கள் பாலு, கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரகுமார், மற்றும் செவிலியர்கள் மருந்தாளுநர்கள், ஆய்வக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.