Home செய்திகள் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மாபெரும் ஓவிய கண்காட்சி..

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மாபெரும் ஓவிய கண்காட்சி..

by mohan

திருநெல்வேலி மண்டல கலை பண்பாட்டு துறை சார்பில் மாபெரும் ஓவிய மற்றும் சிற்ப கண்காட்சி 02.02.2021 செவ்வாய் கிழமை அரசு அருங்காட்சியகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு இ.ஆ.ப அறிவுரையின் படி நடக்கும் இக்கண்காட்சியில்நெல்லை அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இக்கண்காட்சியை சென்னை கவின் கலைக் கல்லூரியின் மேனாள் முதல்வர் ஓவியர் சந்துரு திறந்து வைத்து உரையாற்றினார். அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி,கலை பண்பாட்டு துறை உதவி இயக்குநர் சுந்தர், பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா ஆகியோர் உடன் இருந்தனர்.அவர் தனது உரையில் “வாழ்க்கையின் படிப்பினையும், பண்பாட்டினையும் பிரதிபலிப்பதே கலையாகும். இங்குள்ள ஓவியங்களைப் பார்க்கையில்,இங்கு வருகை தந்திருக்கும் ஓவியர்களுக்கு இக்கலை நன்றாகவே கைவந்திருக்கிறது. மகிழ்ச்சியடைகிறேன். இத்திறனை வளர்த்தெடுத்த தொடர்ந்து பயிற்சிப் பட்டறைகளை நடத்தணும். அதற்குரிய ஏற்பாடுகளை கலை பண்பாட்டுத் துறை முன்னெடுக்க வேண்டும். நெல்லை அரசு அருங்காட்சியகமும் இணைந்து நடத்த முன்வரணும் எனக் கேட்டுக்கொள்கிறேன் “எனக் குறிப்பிட்டார். கலை பண்பாட்டு துறையின் நெல்லை மண்டில உதவி இயக்குநர் சுந்தர் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் பேரா, கவிஞர் சுப்பையா, கலையாசிரியர்கள் சொர்ணம், செல்லம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கண்காட்சியில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலிருந்து திரளான ஓவியர்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர்.இந்த ஓவிய கண்காட்சி இன்று மாலை நிறைவுறுகிறது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com