மானூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய ரேஷன் கடை ஊழியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள குறிச்சிகுளத்தில் ரேஷன் அரிசியை கடத்திய ஊழியரை பொது மக்கள் பிடித்து உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.ரேஷன் அரிசியைக் பைக்கில் கடத்தும் பொழுது பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. இது குறித்து கூட்டுறவு சங்க உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த உயரதிகாரிகள் கடையை ஆய்வு செய்த பொழுது இந்த ரேஷன் கடையில் ஏராளமான முறைகேடுகள் நடந்தது தெரியவந்த நிலையில், விரைவில் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என உயரதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ரேஷன் கடை ஊழியரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.