தென்காசி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் படைத்த பயனாளிகளுக்கு ஒரே நாளில் தேசிய அடையாள அட்டை; மாவட்ட ஆட்சியர் வழங்கினார்…

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் 200 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஒரே நாளில் தேசிய அடையாள அட்டையை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.முன்னதாக தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தளிர் கிளினிக் எனும் குழந்தைகள் மேம்பாட்டு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் திறந்து வைத்தார். தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தளிர் கிளினிக் – எனும் குழந்தைகள் மேம்பாட்டு மையம் திறப்பு விழாவிற்கு சுகாதாரத்துறை நலப்பணிகள் இணை இயக்குநர் நெடுமாறன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இரா.ஜெஸ்லின் முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் திறந்து வைத்தார். 0 முதல் 18 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு உடற் குறைபாடு ஏற்படுத்தும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதனை விரைவில் சரி செய்வதே இதன் நோக்கமாகும். இதனால் எதிர் காலத்தில் குழந்தைகளுக்கு ஊனம் ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்கலாம். தென்காசி மாவட்ட எக்ஸ்னோரா சார்பாக வழங்கப்பட்ட மரக்கன்றுகளை நட்ட மாவட்ட ஆட்சியர் மரங்கள் துளிர்ப்பது போல் இளம் தளிர்களும் இச்சேவை மூலம் பயனடைய வாழ்த்தினார்.

அதனை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாமும் நடைபெற்றது. முகாமில் 200 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஒரே நாளில் அடையாள அட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். அனைத்து நிகழ்ச்சிகளையும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இரா. ஜெஸ்லின் ஏற்பாடுகள் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் டாக்டர் அகத்தியன், டாக்டர் லதா . டாக்டர் கீதா, டாக்டர் மணிமாலா . டாக்டர் ராஜலட்சுமி , டாக்டர் அன்னபேபி , டாக்டர் ரிஸ்வணா ஃபாத்திமா , டாக்டர் நிர்மல் , செவிலியர் கண்காணிப்பாளர் மேரி புஷ்பம் , ராஜாத்தி ஜேகதா , செவிலியர் ஸ்ரீ கலா , வசந்தி மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இரா.ஜெஸ்லின் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்