Home செய்திகள் தென்காசியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்…

தென்காசியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்…

by mohan

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் தென்காசி மாவட்ட தலைவர் சு.பார்த்த சாரதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் க.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் வ.சுப்புராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் க.துரை சிங் துவக்க உரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர்கள் அ‌.ஜெயராமன், பி.ராஜசேகரன், இராமநாதன், அ‌.கணேசன் மாவட்ட இணைச் செயலாளர்கள் சு.வெங்கடேஸ்வரன், அ.அன்பரசு, பெ.உ.சிக்கந்தர் பாவா, ந.ஆறுமுகம் ஆகியோர் விளக்க உரை ஆற்றினர். அதனை தொடர்ந்து மாநில செயற்குழு உறுப்பினர் சி.பழனி மாவட்ட பிரச்சாரக் குழு பொறுப்பாளர்கள் பா.கண்ணன், கி‌.ராதாகிருஷ்ணன், வே‌.கணணன், சீ.கருப்பையா, பா.கோவில் பிச்சை, மு‌.திருமலை முருகன், ஆ‌ சலீம் முகமது மீரான், க. கங்காதரன், மாவட்ட பொருளாளர் மா.மாணிக்க வாசகம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் வெ.சண்முகசுந்தரம் சங்கத்தின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அதனை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சிறப்புரை ஆற்றினார். இதன் முடிவில் மகளிர் குழு பொறுப்பாளர் ஜெ.ஜெயலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com