நெல்லையில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா;நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

தமிழக அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நெல்லையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் கலந்து கொண்டு நெல்லை மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடர் மேல் நிலைப்பள்ளிகளில் பயிலும் +1 மாணவ மாணவியர்களுக்கு சுமார் நூறு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.பின்பு அவர் பேசுகையில், தமிழக அரசு கல்வித்துறைக்கு சுமார் ஆறாயிரம் கோடி நிதி ஒதுக்கி பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள், நோட்டுகள், காலணிகள், பைகள், சீருடைகளும், பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மடிக்கணினியும், இடைநிற்றலை தவிர்க்க படிக்க இயலாத மாணவர்களுக்கு கல்வி பயில ஊக்கத்தொகையும் வழங்கி வருகிறது.தேர்தலின் போது அறிவித்த திட்டங்கள் அல்லாத புதிய திட்டங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார்.தமிழகம் முழுக்க பள்ளிகளில் இருந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பியுள்ளார். அங்கன்வாடி, சத்துணவு திட்டத்திற்கு பல பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஏராளமான பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் நாங்குநேரி வடக்கு ஒன்றிய செயலாளர் மலையன்குளம் சங்கரலிங்கம், சிந்தாமணி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிந்தாமணி ராமசுப்பு, நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் பலர் பங்கேற்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்