நெல்லையில் எம்ஜிஆர் 104-வது பிறந்த தினவிழா;இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நெல்லையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. எம்ஜிஆரின் உருவ படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் வெ.நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆர் 104-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பாளையங்கோட்டை தெற்கு ஒன்றியம் ரெட்டியார்பட்டி ஊராட்சியில் வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் உருவ படத்திற்கு நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வெ.நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து இனிப்பும் வழங்கினார். இதில் ரெட்டியார்பட்டி ஊராட்சி கழக செயலாளர் மணிப்பிள்ளை, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் லெட்சுமணன், கிளை செயலாளர்கள் முருகேசன்,வேலு, பேச்சிமுத்து, சொக்கலிங்கம் மற்றும் நிர்வாகிகள் விக்ரம் நாராயணன், கேபால்.கண்ணன் ஐயப்பன், ரமேஷ்,முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்