Home செய்திகள் கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு…

கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு…

by mohan

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகம் சென்னை மண்ணடியில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் எதிரி சொத்து பாதுகாப்பு சட்டம் 1947 படி இந்தியப் பிரிவினையை அடுத்து, இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் நாட்டில் குடியேறிவர்களின் அனைத்து விதமான சொத்துகளை நிர்வாகம் செய்வதற்காக, 1965 இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பின்னர் இந்திய அரசால் எதிரி சொத்து சட்டம், 1968ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இச்சட்டப்படி பாகிஸ்தானில் குடியேறியவர்களின் சொத்துக்களைப் பராமரிக்க, இந்திய அரசு சில முகவர்களை பாதுகாவலர்களாக நியமித்தது. 1968ஆம் ஆண்டின் எதிரி சொத்து பாதுகாப்பு சட்டத்தில் சில திருத்தங்களுடன் சனவரி 2016 அன்று இந்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. பின்னர் திருத்தப்பட்ட எதிரி சொத்து பாதுகாப்பு சட்டம், மார்ச் 8, 2016 அன்று இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேறியது.இதன்படி பாகிஸ்தானுக்கு குடியேறிவர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் சொத்துகளை விற்பனை செய்ய இயலாது. எதிரி சொத்துகளை இப்போதும் பராமரித்து வருபவர்கள் அது தனிநபராக இருந்தாலும் அல்லது அரசுத் துறையாக இருந்தாலும், அவர்களே அந்தச் சொத்துகளை வைத்துக் கொள்ள முடியும் என்பதே இச்சட்டத் திருத்த முன்வடிவத்தின் சிறப்பு அம்சமாகும். இதன்படி நேற்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தை மத்திய அரசு தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர சென்னை மண்ணடியில் செயல்படும் தலைமை அலுவலகத்தில் ஏராளமான போலீசாரை குவித்தனர். இதனை தொடர்ந்து அந்த அமைப்பின் தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜலாலுதீன் தாங்கினார் மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் ,மாவட்ட பொருளாளர் செய்யது மசூது, மாவட்ட துணைத் தலைவர் அப்துல் காதர், துணைச் செயலாளர் அப்துல் சலாம், புகாரி, ஹாஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர் அனைத்து கிளை நிர்வாகிகள் டவுன் சாகுல் அமீது, பேட்டை நிரஞ்சன்ஒலி, மக்கா நகர் சேகானா, தவ்ஹீத் நகர் குல்லிஅலி, ரஹ்மானியாபுரம் பாரூக், உட்பட ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை புளியங்குடி டிஎஸ்பி சுவாமிநாதன் தலைமையில், புளியங்குடி இன்ஸ்பெக்டர் அலெக்ஸ், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், அமிர்தராஜ் உட்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!