Home செய்திகள் நெல்லையில் புத்தகங்களோடு புத்தாண்டுசிறப்பு கவியரங்கம்..

நெல்லையில் புத்தகங்களோடு புத்தாண்டுசிறப்பு கவியரங்கம்..

by mohan

நெல்லையில் “புத்தகங்களோடு புத்தாண்டு” கவியரங்கம் நடந்தது. தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை மாவட்ட மைய நூலகம், வாசகர்வட்டம் தேசிய வாசிப்பு இயக்கம் இணைந்து புத்தாண்டில் மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக புத்தகங்களோடு புத்தாண்டு இரண்டாம் நாள் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வாசகர் வட்டத் தலைவர் மரியசூசை தலைமை தாங்கினார். வாசகர் வட்டத் துணைத் தலைவர் முனைவர் கோ கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார்.நூலக கண்காணிப்பாளர் சங்கரன், தேசிய வாசிப்பு இயக்கத் தலைவர் தம்பான், நூலகர் அகிலன் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநராட்சி ஆணையாளர் ஜி.கண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தனது சிறப்புரையில் , “இன்றைய இளைஞர்கள் நூலகத்தை பயன்படுத்த வேண்டும்.இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் அதிக நேரத்தை வாட்ஸ்அப், பேஸ்புக் போன்று வீணாக கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.அந்த இளைஞர்கள் வாசிக்கும் பழக்கத்தை கை கொள்ள வேண்டும். தன் வீட்டிற்கு அருகில் உள்ள நூலகத்திற்கு சென்று பத்திரிகைகள், புத்தகங்கள் எடுத்து படித்து தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். சமுதாய நலனில் அக்கறை கொள்ள வேண்டும். வீணாக தேவையில்லாத எதிரான கருத்துகளை வளர்த்துக் கொள்ளக்கூடாது. நற் சிந்தனைகளையும் நல்ல எண்ணங்களையும் வளர்த்து நாட்டிற்கு நலம் சேர்க்கக் கூடிய வகையில் பாடுபட வேண்டும்”. என்று மாநகராட்சி ஆணையர் ஜி கண்ணன் வலியுறுத்தினார். தொடர்ந்து கவிஞர் பாப்பாகுடி இரா செல்வமணி தலைமையில் புத்தாண்டே நீ என்கிற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. எழுத்தாளர் நாறும்பூநாதன் கவியரங்கை தொடங்கி வைத்தார். கவியரங்கில் மூக்குபீறி தேவதாசன்,சக்தி வேலாயுதம்,கணபதி சுப்ரமணியன், சிற்பி பாமா, பிரபு , தச்சை மணி மற்றும் நந்தினி வைகுண்ட மணி முனைவர் முத்துகிருஷ்ணன், கமலலியோனா ஆகியோர் கவிதை வாசித்தனர். விழாவில் தேசிய வாசிப்பு இயக்க செயலாளர் முனைவர் சரவணக்குமார் , பொருளாளர் அ.பாலாஜி,வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் சு.முத்துசாமி , கி.சந்திரபாபு , ஜெயந்திமாலா, நூலகர்கள் மகாலட்சுமி , சண்முகசுந்தரம், ஜெயமங்களம், வேலம்மாள், மற்றும் நூலகர்கள், பணியாளர்கள், வாசகர்கள், பொதுமக்கள், கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக நூலகர் இரா.முத்துலட்சுமி நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com