நெல்லையில் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வினியோகம்;மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் ஆய்வு..

தமிழக மக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக பொங்கல் பரிசாக 1கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 1முழுக் கரும்பு துணிப்பை உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரொக்கத் தொகை ரூபாய் 2500 ஆகியவை நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் என தமிழக முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார். அதன் படி, நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் 3ம் நம்பர் கடை நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுக்கான டோக்கன்கள் வினியோகம் செய்யப்படுவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மகா கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்