Home செய்திகள் தென்காசி அருகே மருத்துவ கல்லூரிக்கு தேர்வான முஸ்லிம் சமூக மாணவி;மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முக்கிய பிரமுகர்கள் பாராட்டு..

தென்காசி அருகே மருத்துவ கல்லூரிக்கு தேர்வான முஸ்லிம் சமூக மாணவி;மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முக்கிய பிரமுகர்கள் பாராட்டு..

by mohan

தென்காசி அருகே கிராமத்தில் படித்து மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்ற முஸ்லிம் சமூக மாணவியை காவல் கண்காணிப்பாளர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாராட்டினர்.தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மேட்டூர் கிராமம் ரஹ்மானியாபுரம் தெற்கு தெருவில் வசிக்கும் முகமது அலி மகள் லத்தீபா. பாவூர்சத்திரம் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து முடித்து விட்டு நீட் தேர்வு எழுதினார். அதில் சிறுபான்மை சமூகத்திற்கான 3.5 இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

கிராமத்தில் படித்து நீட் தேர்வில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த இந்த மாணவியை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்தார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், தென்காசி மீரான் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அப்துல் அஜீஸ், செய்யது குரூப் இயக்குனர் செய்யது ரப்பானி, திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் ஆணையாளர் சீனி அஜ்மல் கான், ஜெம் ஜின்னா, ராயல் மருத்துவமனை மருத்துவர் சையத் இப்ராஹிம்,எம் கே எம் புகாரி, அதிமுக தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் மோகன் தாஸ் பாண்டியன்,திமுக கொள்கை பரப்புச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, சமூக ஆர்வலர் நெல்லை மவுலானா, மனிதநேய மக்கள் கட்சி மாநில செயலாளர் மைதீன் சேட் கான், ரவணசமுத்திரம் தொழிலதிபர் செய்யது சுலைமான், பொட்டல்புதூர் சேக், , போத்தீஸ் முருகேசன், மின்னல் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைமை செயற்குழு உறுப்பினருமான சமூக ஆர்வலர் மில்லத் இஸ்மாயில், முஸ்லிம் லீக் மாநில பேச்சாளர் தென்காசி முகமது அலி, தினத்தந்தி நாளிதழ் நிருபர் குறிச்சி சுலைமான் உள்ளிட்ட ஏராளமானோர் மாணவியை பாராட்டினர். செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com