Home செய்திகள் தென்காசி புதிய கலெக்டர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழாவில் புறக்கணிப்பு; கடையநல்லூர் எம்எல்ஏ கடும் கண்டனம்..

தென்காசி புதிய கலெக்டர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழாவில் புறக்கணிப்பு; கடையநல்லூர் எம்எல்ஏ கடும் கண்டனம்..

by mohan

தென்காசி மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைப்பு வழங்காமல் புறக்கணித்துள்ளதாக கடையநல்லூர் எம்எல்ஏ முஹம்மது அபூபக்கர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.இது குறித்து எம்எல்ஏ கூறியுள்ளதாவது: 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்றது முதல் தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட வேண்டும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளேன்.கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானமாக பொதிகை சாரல் தென்காசி தனி மாவட்ட அறிவிப்புக்கு காத்திருக்கிறது என தெரிவித்தேன். இவை அனைத்தும் அவை குறிப்பில் மற்றும் பத்திரிகை செய்திகளாக உள்ளன. அதன் அடிப்படையில் மறுதினம் தமிழக அரசு தென்காசியை தனி மாவட்டமாக அறிவிப்பு செய்தது. தனி மாவட்டமாக பிரிக்கப்பட தென்காசி மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் அலுவலகத்தை சில சுயநலவாதிகளுக்கா அதிமுக அரசு ஆயிரப்பேரியில் வருடத்திற்கு 8 மாதங்கள் தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்தில் கட்டுவதற்கு முனைப்புடன் செயல்பட்டது.தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதி மக்களும் எளிதாக வந்து செல்லும் வகையில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆயிரப்பேரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.அதற்காக நடைபெற்ற அனைத்து போராட்டங்களில் கலந்து கொண்டதோடு கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மாற்று இடத்தில் அமைக்க பரிசோதனை செய்யப்பட்டது. தென்காசி தனி மாவட்டம், மையப்பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அமைய தொடர்ந்து குரல் கொடுத்து வந்த இந்த மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஆகிய என்னை இன்று 11/12/20 தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே புதிய கலெக்டர் அலுவலகத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு அழைக்காமல் புறக்கணித்ததிற்கு கடையநல்லூர் தொகுதி மக்கள் சார்பிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.அதிமுக அரசு விரைவில் அகற்றப்பட்டு திமுக அரசு தளபதி மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக அமையும் காலம் வெகு தொலைவில் இல்லை. கடையநல்லூர் புதிய தாலுகா அலுவலகம் இதேபோல் காட்டுப்பகுதியில் பூமி பூஜை போடப்பட்டு , பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு நகர எல்லைக்குள் புதிய கட்டிடம் கட்டப்பட்டு பணிகள் முடிந்து 1 மாத காலங்கள் ஆகியும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராததன் மர்மம் என்ன? என எம்எல்ஏ அபுபக்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com