திருநெல்வேலி மத்திய சிறைச் சாலையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி…

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.மத்திய சிறைச்சாலை மற்றும் கிராம உதயம் இணைந்து மத்திய சிறைச்சாலை தோட்டத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலத்தில் 300 மரக்கன்றுகள் மற்றும் 300 மூலிகைச் செடிகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து காளான் வளர்ப்பு மற்றும் தேனீக்கள் வளர்ப்பு குறித்து பயிற்சிஅளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு சிறைத்துறை டிஐஜி பழனி தலைமை தாங்கி மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பாளை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அவர் செய்திருந்தார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர் புகழேந்தி, பகத்சிங், நல்நூலகர்நகர் முத்துகிருஷ்ணன், ஆசிரியர் முனைவர் கோ.கணபதி சுப்பிரமணியன், சமூகஆர்வலர் முத்துசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்