Home செய்திகள் அநியாய வட்டி வசூலிப்பதா?-மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களை கண்டித்து சுரண்டையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்..

அநியாய வட்டி வசூலிப்பதா?-மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களை கண்டித்து சுரண்டையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்..

by mohan

மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வரும் நுண்நிதி நிறுவனங்களால் அநியாய வட்டி வசூலிக்கப்படுவதாக கூறி சுரண்டையில் பீடி சுற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் பீடி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகைக்கு கொரோனா காலத்திலும் வட்டி வசூல் செய்யும் நுண் நிதி நிறுவனங்களை கண்டித்தும், ஆள் குறைப்பு, கூலி குறைப்பு செய்திடும் பீடி கம்பெனிகளை கண்டித்தும் சுரண்டை அண்ணா சிலை அருகில் மாவட்ட பீடி தொழிலாளர் சங்க (சிஐடியூ) சார்பில்  வட்டார தலைவர் பொட்டு செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் பொற்செல்வி, முத்து செல்வி, காளியம்மாள், செல்வி, லட்சுமி, வேலம்மாள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் வேல்முருகன் சிறப்புரை நிகழ்த்தினார். தங்கம், மகாவிஷ்ணு, ஆரிய முல்லை, அய்யாத்துரை, கற்பக வல்லி, கருப்பசாமி, சுந்தரமூர்த்தி நயினார் உட்பட பலர் கலந்து கொண்டனர் கலந்து கொண்டு பீடி தொழிலாளர் நலன் தொடர்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.சிறு குறு தொழில்கள் செய்து வரும் ஏழை எளிய மக்களை குறிவைத்து வட்டி வசூலிப்பில் கடுமை காட்டும் (மைக்ரோ பைனான்ஸ்) நுண் நிதி நிறுவனங்களை கண்டித்து மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அவ்வப்போது போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com