Home செய்திகள் தென்காசி பகுதியில் வாகன வேக கட்டுப்பாட்டு கருவியில் தொடரும் வசூல் வேட்டை- முறைப் படுத்தக் கோரி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் தமுமுக கோரிக்கை..

தென்காசி பகுதியில் வாகன வேக கட்டுப்பாட்டு கருவியில் தொடரும் வசூல் வேட்டை- முறைப் படுத்தக் கோரி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் தமுமுக கோரிக்கை..

by mohan

தென்காசி மாவட்டத்தில் விபத்தினை தடுக்கும் வகையில் வாகனங்களில் ஒட்டப்படும் ஒளிரும் பட்டை மற்றும் வாகனங்களில் அமைக்கப்படும் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளில் இடைத்தரகர்கள் மூலம் வசூல் வேட்டை நடைபெறுவதாகவும், அதனை முறைப்படுத்தக் கோரியும் தமுமுகவினர் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தை சார்ந்த அனைத்து வாகன ஓட்டுனர்களும் கொரோனா கால கட்டத்தில் வாகன வரி தகுதி சான்றுகள் பெறுவதற்கு மிகவும் சிரமத்தில் உள்ளனர். மேலும் அன்றாட தேவையான உணவின் தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாகவும் பசியும் பட்டினியுமாக வாழ்வாதாரத்தை கழித்து கொண்டு உள்ளனர். மேலும் இந்த சூழ்நிலையில் வட்டிக்கு பணம் வாங்கி வாகனத்திற்கு வரி செலுத்த மற்றும் தகுதி சான்று பெறுவதற்கு அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் செலுத்த சென்றால் வாகனத்திற்கு ஒளிரும் ஒளிர் பட்டை sticker ஒட்டினால் தான் fc தகுதி சான்று வழங்கப்படும் என அரசு அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு விதிகளை மதித்து விபத்தினை தவிர்க்கும் பொருட்டு ஒளிர் பட்டை ஒட்டுவதற்கு சென்றால் தனிநபர் அனுமதி பெற்று ஒட்டக்கூடிய அந்த நபர் அதிகமான விலை வசூல் செய்கின்றார். அதற்கான விலை பட்டியல் தகவலும் ஏதுமில்லை. ஒரு ஆட்டோவிற்கு வெளியில் ஒட்டக்கூடிய ஒளிர் பட்டை விலை 150. ஆனால் அந்த தனிநபர் ஆட்டோவிற்கு 650,கார் 1500, Eicher 2000 லாரிக்கு 4000 வரை அதிகமான வசூல் வேட்டை நடைபெறுகிறது.மேலும் இந்த ஒளிர் பட்டை அரசு நிர்ணயித்த விலை எவ்வளவு? மேலும் விலை பட்டியல் கடைகளில் தெரியப் படுத்தப்படுவதில்லை,

அதுமட்டுமல்லாமல் வாகனங்களில் பொருத்தப்படும் வேகக்கட்டுப்பாடு கருவியின் விலை எவ்வளவு? இடைதரகர்கள் மூலமாக அதிகமான விலைக்கு வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்தப்படுகிறது, இவர்கள் ஏழைகளிடம் அடிக்கும் கொள்ளையைத் தடுத்திடவும், அனைத்து ஓட்டுநர் வாகன உரிமையாளர் சர்பாகவும் தமுமுக ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் மனு பற்றி பேசினார். அதன் பெயரில் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி அவர்களை சந்தித்து தமுமுக நிர்வாகிகள் பேசினர். இரண்டு நாட்களில் அந்த மனுமீது நடவடிக்கை எடுத்து பிரச்சினைகளை சரிசெய்து தருவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் முன்னாள் கவுன்சிலர் சலீம் தலைமை தாங்கினார். முன்னிலை மாவட்ட பொருளாளர் செங்கை ஆரிப்,தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் அச்சன்புதூர் ரஜாய், தமுமுக தொண்டரணி மாவட்ட பொருளாளர் வடகரை துரை, நகரத்தலைவர் அபாபீல் மைதீன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் கொக்கரிச்சான் ஜமால் கோரிக்கை மனுவை அளித்தார். இதில் தென்காசி நகர செயலாளர் ஜாபர் ஷரீப், நகர மருத்துவ சேவை அணி செயலாளர் அபுபக்கர் சித்திக் மற்றும் கொடிமரம் ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் வாடகை கார் ஒட்டுனர் உரிமையாளர் நலச்சங்க தலைவர் அப்துல் காதர், ஷாஜகான் மூபிஸ்,அப்துல் ரசாக் ,பீர்சாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!