கடையநல்லூர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு-இயற்கை ஆர்வலர்களோடு மரக்கன்று நடும் பணியில் தென்காசி மாவட்ட எஸ்.பி..

கடையநல்லூர் நிலையத்தில், வியாழக்கிழமை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் ஆய்வு மேற்கொண்டார்.காவல் நிலையத்தின் பணிகள்,சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குற்ற நடவடிக்கைகள், போக்குவரத்து பிரச்னைகள் காவலர்களின் குறை நிறைகள், காவல் நிலையத்தில் உள்ள வழக்கு சம்பந்தமான அனைத்து பதிவேடுகள் மேலும் காவல் நிலையத்தில் ஊரடங்கு காலங்களில் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தல் சம்பந்தமாக மற்றும் கிராமத்திற்கு ஒரு காவலர்கள் நியமிக்கப்பட்டவர்கள் கிராம மக்களின் குறை நிறைகளை கேட்டு அவர்களுடன் காவல்துறையினர் நல்லுறவுடன் நடந்து கொள்ள வேண்டும், அவர்களோடு நட்புடன் பழக வேண்டும் இன்னும் சிறப்பாக செயல்பட அறிவுரை வழங்கினார்.

அதன் பின்னர் கடையநல்லூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் ஒவ்வொரு முறை ஆய்வின்போது காவல் நிலைய வளாகத்தில் இயற்கை ஆர்வலர்கள் ஏற்பாட்டில் மரக்கன்று நடுவது வழக்கம். அதன் அடிப்படையில் கடையநல்லூர் தாலுகா ஊடக இயற்கை ஆர்வலர்கள் மாரியப்பன், குமர முருகன், குறிச்சி சுலைமான், வெள்ளத்துரை ஆகியோர் ஏற்பாடு செய்த மரக்கன்றுகளை காவல் நிலையம் முன்பு நட்டார். இதில் காவல் ஆய்வாளர் கோவிந்தன், மகாலட்சுமி, உதவி ஆய்வாளர்கள் விஜயகுமார், அமிர்தராஜ்,சிவசங்கரி, ராஜேந்திரன், தனிப்பிரிவு ஏட்டு செய்யதலி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உதவிக்கரம் நீட்டுங்கள்..