
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்திட அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் நியாய விலைக்கடைகள் மூலம் அனைவருக்கும் இலவசமாக முககவசங்களை வழங்கி வருகிறது.அதன்படி தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் கூட்டுறவு பண்டக சாலை நியாய விலைக்கடைகள் மூலம் தமிழக அரசின் இலவச முககவசம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியை தலைவர் எஸ் கேடி ஜெயபால் துவக்கி வைத்தார்.சுரண்டை அருகே சிவகுருநாதபுரம் கூட்டுறவு பண்டக சாலையில் உள்ள நியாய விலைக்கடை மூலம் 13455 குடும்ப அட்டை தாரர்களுக்கு சுமார் 90500 முககவசம் வழங்கும் நிகழ்ச்சி கூட்டுறவு சார்பதிவாளர் கோபிநாத், கள அலுவலர் செல்வகணேஷ், ஆகியோர் ஆலோசனையின் படி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவு பண்டக சாலை தலைவர் ஜெயபால் தலைமை வகித்து முககவசங்களை வழங்கி கொரோனா தடுப்பில் முககவசங்களின் பங்கு குறித்து விளக்கி பேசினார். மேலாளர் சரவணகுமார் வரவேற்றார். கூட்டுறவு பண்டக சாலை இயக்குனர்கள் சமுத்திரம், அண்ணாமலை, தேனம்மாள் தங்கராஜ், முத்துராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.