
தேவேந்திர குல சமூகத்தினரின் உட்பிரிவுகளை 7-ஐ இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழர் விடுதலைக்களம் சார்பில் நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தேவந்திர குல வேலாளர் என அறிவித்து அரசாணை வெளியிடாத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும்,தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து அவர்களின் மரணத்திற்கு காரணமான வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்திட கோரியும், தூத்துக்குடி மாவட்டம் பொட்டல் காடு பகுதியில் தேவேந்திர குல சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் குடியிருப்பு பகுதி வழியாக எரிவாயு குழாய் பதிக்க முயற்சித்துவரும் IOCL நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கேரள மாநிலம் மூணாறில் சமீபத்தில் நிலச்சரிவில் பலியான தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த கோரியும், உயிரிழந்த மக்களுக்கு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டும் கேரள அரசை கண்டித்தும்தமிழர் விடுதலைக் களம் தலைவர் ப.ராஜ்குமார் ஆணையின் படி தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருநெல்வேலியில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட, மாநகர, ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.