நெல்லையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக-மமக தன்னார்வலர்கள்…

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை தன்னார்வலர்கள் நல்லடக்கம் செய்து உதவி வருகின்றனர்.அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சார்ந்த 75 வயதுடைய முதியவர் ஒருவர் கொரனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

இதையடுத்து, அவரது உறவினர்கள் , மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டதின் பேரில், தமுமுக மாவட்ட செயலாளர் அலிஃப் பிலால் தலைமையில்பாளை பகுதி தமுமுக-மமக தலைவர் காதர், மருத்துவ அணி செயலாளர் ஜெய்லானி , கழக உறுப்பினர்கள் இருவர்கள் மூலம் அவரது உடலை அவசர ஊர்தியில் குலவணிகர்புரம் CSI கல்லறை தோட்டத்திற்கு எடுத்து சென்று நல்லடக்கம் செய்தனர்.இரங்கல்களை பலரும் வார்தைகளால் மட்டுமே கூறிவரும் நிலையில்,எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி தங்களது சேவையாலும் செயல்களாலும் மிளிரும் தமுமுக-மமக தன்னார்வலர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்