
செங்கோட்டையில் ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய மோடி அரசை கண்டித்து சிஐடியு-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தென்காசி மாவட்டம் செங்கோட்டை இரயில் நிலையம் முன்பு சிஐடியு தாலுகா குழு சார்பில் இரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு தாலுகா தலைவர் டி.வன்னியபெருமாள் தலைமை தாங்கினார்.
தென்காசி செயலாளர் கிருஷ்ணன், கட்டுமான சங்க செயலாளர் கசமுத்து, பீடி சங்க செயலாளர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிஐடியு மாவட்டத்தலைவர் வேல்முருகன், தென்காசி தாலுகா தலைவர் லெனின்குமார், மற்றும் நிர்வாகிகள் சேகர், சிவக்குமார், தாணுமூர்த்தி, கருப்பையா, மாரியப்பன், கட்டுமான சங்க வட்டாரத்தலைவர் இரயில்வே முத்துசாமி, முருகன், வட்டார மாதர்சங்க தலைவி ஆயிஷா, எஸ்எப்ஐ மத்தியக்குழு உறுப்பினர் சத்யா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் முழங்கப்பட்டது.பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 17பேரை செங்கோட்டை காவல் துறை கைது செய்து வல்லம் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.