முகம்மது சதக் கல்லூரியில் 55வது இந்திய தேசிய கடற்படை தினம்…

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கப்பல் துறைச் சார்பாக “55வது இந்திய தேசிய கடற்படை தினம்” முதல்வர் முனைவர். அப்பாஸ் மைதீன் தலைமையிலும் கல்லூரி கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர் முன்னிலையிலும் நடைபெற்றது.

​இந்நிகழ்ச்சியில் கல்லூரி கப்பல் துறைப் பேராசிரியர் தங்கவேல் அனைவரையும் வரவேற்றார். 55வது இந்திய தேசிய கடற்படை தினத்தை முன்னிட்டு உச்சிப்புளி, இந்திய கப்பற்படையின் ஐ.என்.எஸ். பருந்துவின் கமாண்டிங் ஆபிசர். கேப்டன் குல்தீப் டங்சேல், கல்லூரியில் இந்திய கடலோர காவல் படை கொடியை ஏற்றி வைத்து கல்லூரி கப்பல்துறை மாணவர்கள் நடத்திய அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

இந்திய கப்பற்படையின் ஐ.என்.எஸ். பருந்துவின் கமாண்டிங் ஆபிசர். கேப்டன் குல்தீப் டங்சேல் தனது சிறப்புரையில் இந்திய கப்பற்படையின் சிறப்பான பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் தேசிய கடல் சார் தினத்தின் முக்கியத்துவம் மற்றும் கப்பற்படையில் பொறியியல் மாணவர்களுக்கு உள்ள வேலைவாய்ப்புகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

​கடல்சார் பொறியியல் பாடத்தில் அண்ணாப்பல்கலைகழக அளவில் தரவரிசையில் முதல் மதிப்பென் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் இந்திய கப்பற்படையின் ஐ.என்.எஸ். பருந்துவின் கமாண்டிங் ஆபிசர். கேப்டன் குல்தீப் டங்சேல் வழங்கினார்.

​இந்நிகழ்ச்சியில் கப்பற்படை அதிகாரிகள் லெப்டினென்ட் கமாண்டர் குல்வாக்ஷி காலே, லெப்டினென்ட வைபோ விபோரே ஆகியோர் கலந்து கொண்டு கப்பற்படையில் பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பற்றிய வினாக்களுக்கு விடையளித்தனர்.

​இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கப்பல் துறைப் பேராசிரியர்கள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன் ஆகியோர் செய்திருந்தனர்.