லட்சக்கணக்கான புத்தகங்களுடன் செயல்படும் ‘தேசிய மின்னணு நூலகம்’ – புத்தக பிரியர்கள் இனி தடையின்றி தரவிறக்கம் செய்யலாம்

மத்திய மனிதவள அமைச்சகத்தின் சார்பில் “தேசிய மின்னணு நூலகம்” துவங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தொழிநுட்ப வசதிகளை பயன்படுத்தி அனைவருக்கும் கல்வி என்ற உயரிய நோக்கோடு லட்சக்கணக்கான புத்தகங்களை கொண்டு செயல் பட்டு வருகிறது. ஆரம்ப கல்வி நிலையிலிருந்து முதுநிலைக் கல்வி வரை கற்பவர்கள் பயனடையும் வகையில் புத்தகங்களை தொகுத்துள்ளனர். மேலும் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்பவர்களும், புத்தக பிரியர்களும் தங்களுக்கு தேவையான புத்தகங்களை விரைவாக, கால தாமதமின்றி வாசிக்க முடிகிறது.

3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதிய 7 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தனித்துவ கட்டுரைகள், ஆராய்ச்சி கட்டுரைகள், அரிய ஓலை சுவடிகள், செப்பு பட்டயங்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களின் ஆடியோ, வீடியோ பேழைகள் ஆயிரக்கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

கீழ்க்காணும் link ல் சென்று நாம் Register செய்வதன் மூலமாக, நமக்கு தேவையான நூல்களை pdf வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.மாணவர்களுக்கும், அறிவுத் தேடல் உள்ளவர்களுக்கும் இது மிகப்பெரிய பொக்கிஷமாக காட்சியளிக்கிறது.

தேசிய மின்னணு நூலகத்தின் இணைய தள முகவரி : https://ndl.iitkgp.ac.in/