
கீழக்கரையில் வடக்குத் தெரு சமூக நல அமைப்பு ( NASA) மற்றும் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை (KECT) இவ்விரு அமைப்புகளும் கீழக்கரையில் பல வருடங்களாக மார்க்க சேவை மற்றும் சமுதாய பணிகளை கீழக்கரை மக்களுக்கு செய்து வருவது அனைவரும் அறிந்த விசயம். அதுபோல் இவ்விரு அமைப்புகளும் வருடந்தோரும் கோடை விடுமுறை காலத்தில் மாணவர்கள் பயன் பெறும் விதமாக சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்துவது வழக்கம். இந்த வருடம் பயிற்சி முகாமை பயனுள்ளதாகவும், சிறப்பாக செயல்படும் விதமாக NASA அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் அல் மதரஸத்துல் முஹம்மதியா மற்றும் KECT ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து கோடைகால சிறப்பு முகாம்களை நடத்தினர்.
இந்த வருட கோடைகால சிறப்பு பயிற்சி முகாமின் நிறைவு விழா வரும் திங்கள் கிழமை (22-05-2017) அன்று மாலை 05.00 மணியளவில் புது கிழக்கு தெரு KECT திடலில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பெண்களும் பங்கேற்க வசதியாக பெண்களுக்கு தனி இட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் JAQH முன்னாள் மாநில தலைவர் S.கமாலுத்தீன் மதனீ, தாருர் ரஹ்மத் இணையம் ஆசிரியர் A.முஹம்மது ரஃபிவு ஃபிர்தவ்ஸி மற்றும் அல் அஷ்ரஃபியா அரபிக்கல்லூரி முதல்வர் நிலாமுத்தீன் அல் அஷ்ரஃபிப்யு ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.
You must be logged in to post a comment.