மகளை விஷம் வைத்து கொல்ல முயற்சி பெற்றோர் கைது..

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ளது குளிக்காடு கிராமம் இப்பகுதியை சேர்ந்தவர் குமார் (42)இவர் மினி சரக்கு வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார் இவருடைய மனைவி தனலட்சுமி(35) இவர்களுக்கு 4 பெண் பிள்ளைகள் உள்ளனர் மூத்த பெண் பூமணி (16) இவர் மல்லுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார்

இந்நிலையில் குமார் தனது மினி சரக்கு வாகனத்தை இயக்கி வரும் சதீஷ் என்பவரும் தனது மகள் பூமனியும் காதலிப்பதாக சந்தேகமடைந்தார். இதனால் தினமும் குடித்து விட்டு தனது மகள் பூமனியை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. தான் யாரையும் காதலிக்கவில்லை என பூமனி எடுத்துக்கூறியும் தந்தை குமார் நம்பவில்லை. ஊரில் உள்ளவர்களிடம் தனது மகள் பூமனி மற்றும் அதே ஊரை சேர்ந்த சதீஷ் என்பவரும் காதலிக்கின்றார்களாக என விசாரித்து அவமானப்படுத்தி உள்ளார்.

மேலும் அத்தை மகன் ராஜா என்பவரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். நான் படிக்க வேண்டும் என திருமனத்திற்க்கு பூமனி மறுத்ததால் பெற்றோர்கள் இருவரும் சேர்ந்து இரும்பு கம்பியால் கை மற்றும் முதுகு பகுதியில் ச10டு வைத்து மகளை கொடுமை படுத்தி உள்ளனர் கடந்த 2நாட்களாக பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே சிறை வைத்துள்ளனர்

இன்று காலை பள்ளிக்கு செல்லுமாறு மகளிடம் தாய் தனலட்சுமி கூறி மதிய உனவை டிபன் பாக்சில் போட்டு கொடுத்துள்ளார். பூமனி பள்ளிக்கு செல்ல புறப்பட்டபோது 2வது தங்கை சத்யா வந்து நீ கொண்டு போகும் மதிய உணவில் அம்மா குருனை விஷம் கலந்து இருப்பதாக கூறினார். திறந்து பார்க்கும் போது ஏதோ விஷ மருந்து வாடை ஏற்பட்டுள்து சுதாரித்து கொண்ட மாணவி நேராக உனவு பாக்சுடன் மகேந்திரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தன்னை கொலை முயற்சி செய்த பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் மகேந்திரமங்கலம் போலீசார் பெற்றோரை தேடி குளிக்காடு சென்றனர் அப்போது அவர்கள் வீட்டில் இருந்து தலைமறைவானது தெரியவந்தது.

பெற்றோர்கள் வெளியூர் செல்ல ஜிட்டாண்ட அள்ளி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருப்பதாக மகேந்திர மங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது விரைந்து சென்ற போலீசார் குமார் அவரது மனைவி தனலட்சுமி இருவரையும் கைது செய்து விசாரித்ததில் மகள் திருமணத்திற்க்கு ஒத்துக்கொள்ளாததால் விஷம் வைத்து கொல்ல முயன்றது உன்மை என ஒத்துக்கொண்டனர் இருவரையும் பாலக்கோடு கோர்ட்டில் ஆஜர் படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர். மாணவி பூமனியை சைல்டு லைன் அமைப்பினர் மீட்டு தர்மபுரி சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

பெற்றோரே மகளை கொல்ல முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.